2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவுடன் இணைந்து இராஜதந்திர புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்கொட் மொரிசன் கூறினார்.
மேலும் சமீபத்திய ஆண்டுகளில் சீனாவுடனான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், அவுஸ்ரேலியாவும் புறக்கணிப்பில் இணைந்ததில் ஆச்சரியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் ஒலிம்பிக் போட்டிகளில் தமது நாட்டு வீரர்கள் பங்குபற்றுவார்கள் என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.
இதேநேரம் அமெரிக்காவின் அறிவிப்பை கண்டித்துள்ள சீனா, அதற்கு பதிலடி கொடுப்பதாகவும் மிரட்டல் விடுத்துள்ளது.
மனித உரிமைகள் குறித்த கவலைகளை அடுத்து பெய்ஜிங்கில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு தூதரக அதிகாரிகளை அனுப்ப மாட்டோம் என அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.