வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் ஆகியவற்றுக்கு விநியோகிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறுமாறு, லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட முத்திரை அகற்றப்படாத சமையல் எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, குறித்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.