நாட்டின் சில பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசியாக இலங்கை மக்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் கொழும்பு நகரப் பகுதியில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், தடுப்பூசித் திட்டத்தின் முகாமைப் பொறுப்பு மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.