மின்சார வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு மக்களை ஊக்குவிக்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வாகனங்களின் எதிர்காலம் மின்சாரத்தைக்கொண்டே அமைந்திருக்கும் என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக தரமான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தச் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெரும்பாலான வளர்ந்த நாடுகள் மின்சார வாகனங்களை வாங்குவதற்கான வசதிகளை அறிமுகப்படுத்துகின்றன எனவும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சில நாடுகள் மின்சார வாகனங்களை வாங்கும்போது சாலை வரி விலக்கு மற்றும் குறைந்த வட்டிக்கு குத்தகை வசதிகளுடன் குறிப்பிட்ட சலுகைகளை அனுமதிக்கின்றன என்றும் இது மக்களை மின்சார வாகனங்களை கொள்வனவு செய்ய ஊக்குவிக்கும் என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
மின்சார வாகனங்களின் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் மற்றும் காற்று மாசுபாட்டை குறைக்கும் என்றும் அந்தச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.