சர்ச்சைக்குரிய தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக, மக்கள் போராட்டங்களை நடத்திய பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் செர்ஜி டிகானோவ்ஸ்கிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு நகரமான கோமலில் உள்ள நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக பெலாரஷ்ய அரச செய்தி நிறுவனம் பெல்டா தெரிவித்துள்ளது.
மற்ற மூன்று எதிர்க்கட்சி பிரமுகர்களான, மைகோலா ஸ்டாட்கேவிச், இகோர் லோசிக், விளாடிமிர் சைகனோவிச் இதே விசாரணையின் ஒரு பகுதியாக குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார் என பெல்டா தெரிவித்துள்ளது.
இதனிடையே, செர்ஜி டிகானோவ்ஸ்கியின் மனைவி ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்கயா, அவருக்கு வழங்கப்படும் எந்த தண்டனையும் ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறியுள்ளார்.
லுகாஷென்கோவின் தேர்தல் வெற்றி குறித்து கருத்து வேறுபாடுகளைக் கொண்ட டிகானோவ்ஸ்கி, பெலாரஸில் சிறையில் அடைக்கப்பட்ட சமீபத்திய முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.
1994ஆம் ஆண்டு முதல் பெலாரஸை ஆட்சி செய்து வரும் லுகாஷென்கோ,; 2020 ஜனாதிபதித் தேர்தலில் தானே வெற்றி பெற்றதாக அறிவித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.