இலங்கையில் 14 இலட்சத்து 40 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் 20 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கை பிரஜையும் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்கள் கடந்திருந்தால், மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள எந்தவொரு தடுப்பூசி நிலையத்திலும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
நாட்டில் புதிதாக 762 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்த்து 76 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் 20பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.