அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் மேலும் இரண்டு வாரங்களுக்கு நாட்டில் கட்டுப்பாடுகளை சிம்பாப்வே கடுமையாக்கியுள்ளது.
புதிய நடவடிக்கைகளின் கீழ் அத்தியாவசிய சேவைகள் தவிர அரச நிறுவங்களின் செயற்பாடுகள் 30% ஆக குறைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு கண்டறியப்பட்டதை அடுத்து நாட்டில் நான்காவது அலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாறுபாடு நாட்டில் வேகமாக பரவி வருகின்ற நிலையில் நாட்டில்இதுவரை மொத்தம் 177,690 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா தொற்று உறுதியான 4,745 இறப்புகள் இதுவரை சிம்பாப்வேயில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.