பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் நடைபெறவுள்ளது.
இதனால் வங்கி மற்றும் ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2021-22 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது நடப்பு நிதி ஆண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
வங்கி திருத்த சட்டமூலம் இதற்கு வழிவகுக்கும் என்பதால் குறித்த சட்டமூலத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.