பாகிஸ்தான் – சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 33 சந்தேக நபர்களை இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளதாக சியல்கோட் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 33 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு குஜ்ரன்வாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேநேரம், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 85 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வாளர் தாரிக் மஹ்மூத் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் க்ரசண்டி டெக்ஸ்டைல் என்ற ஆடைத் தொழிற்சாலையில், இலங்கைப் பிரஜை பிரியந்த குமார கைத்தொழில் பொறியியல் முகாமையாளராக பணியில் இணைந்துள்ளார்.
அதன் பின்னர் 2012இல் சியல்கோட்டில் உள்ள ராஜ்கோ என்ற தொழிற்சாலையில் பொது முகாமையாளராக பணியில் இணைந்துள்ளார்.
இதன்போது, தமது தொழிற்சாலையில் ஒட்டப்பட்டிருந்த மதசார் பதாகை ஒன்றை அவர் அகற்றியதாக தெரிவிக்கப்டுகிறது.
இந்நிலையில், இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் அவர் எரித்து கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.