ஷாஜஹான்பூரில் கங்கை விரைவுப் பாதை அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) அடிக்கல் நாட்டுகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் நகர் முதல் பிரயாக்ராஜ் வரை இந்த விரைவுச் சாலை அமைக்கப்படுகிறது.
எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயற்படுத்தி வருகின்றன.
வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலையும் கங்கை நதிக்கரையையும் இணைக்கும் ரூ.339 கோடியில் கட்டப்பட்ட வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திறந்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக அம்மாநிலத்தின் ஷாஜஹான்பூரில் கங்கை விரைவுப் பாதை அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இதன் மூலம் நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலையாக இது அமைகிறது. மீரட்நகர் முதல் பிரயாக்ராஜ் வரை ரூ.36,200 கோடி செலவில் 594 கிலோ மீற்றர் தொலைவிற்கு விரைவுச்சாலை அமைக்கப்படவுள்ளது.
இந்த விரைவுச்சாலையில் இந்திய விமானப்படை விமானங்கள் அவசரமாக பறப்பதற்கும் தரை இறங்குவதற்கும் ஏதுவான வகையில் சுமார் 3.5 கிலோ மீற்றர் தொலைவில் விமான ஓடுதளம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.