• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழர் பகுதிகளில் கால்பதிக்கும் சீனா – இந்தியாவுக்கு நேரடி அச்சுறுத்தல்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழர் பகுதிகளில் கால்பதிக்கும் சீனா – இந்தியாவுக்கு நேரடி அச்சுறுத்தல்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Dhackshala by Dhackshala
2021/12/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
88 1
A A
0
52
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழர் தாயகத்தில் சீனா மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், எந்த திட்டங்களானாலும் தாயக மக்களிடமிருந்து வெளிப்படையான இசைவு பெற்ற பின்னரே தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீன வட்டத்தை விரிவாக்கும் ஆட்டத்துக்காகத் தமிழர் தாயகப் பகுதிகளை பலியிடவிடாது, தமிழர் தேசமும் தமிழர் அரசியல் தலைமைகளும் தமது அரசியல் இறையாண்மையினை செலுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கைத்தீவின் தமிழர் தாயகப்பகுதியின் வட புலத்தே, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இயற்றும் மின்சக்தி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ள சீனா, இந்த முடிவுக்கு ‘மூன்றாம் தரப்பின் பாதுகாப்பு’ காரணமென கூறியுள்ளது.

சீனாவின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. எனினும் தமிழர் தாயகத்தின் சீனா மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும்.

போருக்கு பின்னராக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தாயக பகுதிகளில் தொடங்கப்படும் திட்டங்கள் எதுவானாலும் அம்முயற்சிக்கு தாயக மக்களிடமிருந்து வெளிப்படையான இசைவு பெற்ற பின்னரே தொடங்க வேண்டும். இசைவு என்பது திட்டங்களின் அரசியல், பொருளியல் கூறுகளுக்கு மட்டுமன்று, நம்பகமான பன்னாட்டு அமைப்பொன்றின் சூழலியல் மதிப்பாய்வின் ஊடாகச் சூழலியல் கூறுகளுக்கும் இசைவாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

சீன நிறுவனங்களுக்கு திட்டங்கள் வழங்குவதன் மூலம் இந்தியாவைச் சுற்றிவளைக்கவும் அடக்கி வைக்கவும் சீனாவுக்கு உதவும் இலங்கையின் நகர்வுகள் தமிழர் இறையாண்மை மீது நெடுந்தாக்கத்தினை ஏற்படுத்தும். வட புலத்தே யாழ். குடா நாட்டையும் இந்தியாவின் தமிழ்நாட்டையும் பிரிக்கும் குறுகலான பாக்கு நீரிணையில் அமைந்த சிறு தீவுகளான நெடுந்தீவு, அனலைத்தீவு, நைனாத்தீவு ஆகிய இடங்களில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு சைனோ சர் ஹைப்ரிட் டெக்னாலஜி என்ற சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான சீனத் தூதரகம் ‘மூன்றாம் தரப்பு’ எதுவென்று கூறாவிட்டாலும் அது இந்தியாதான் என்று நம்பப்படுகிறது. அந்தச் சிறு தீவுகளில் இந்திய நிறுவனமான அதானி குழுவுக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள திட்டப் பணியை வழங்கும் ஒப்பந்தத்தை கடந்த பெப்ரவரியில் கொழும்பு நீக்கம் செய்து, அதனை சீன நிறுவனத்துக்கு வழங்கிய போது இந்தியா தனது பாதுகாப்பு சார்ந்த கவலைகளை தெரிவித்தது.

இந்திய நிறுவனத்தின் முயற்சியை சீனம் கீழறுத்த செயல் அந்த நேரத்தில் இலங்கையில் தன் நலன்களைக் காத்துக்கொள்வதோடு அண்டை நாடுகளோடு இந்தியாவுக்குள்ள உறவுகளைக் கெடுக்கவும் கிழக்காசிய நாடாகிய சீனத்துக்குள்ள வல்லமையாகக் கருதப்பட்டது.

இலங்கையின் வட கடலோரத்தில் யாழ். குடாநாடும் அதன் கடற்பகுதியில் அமைந்த சிறு தீவுகளும் தொன்றுதொட்டுத் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளன.

ஆகவே, அவை தமிழர் தாயகத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். மேலும் இலங்கைத் தீவின் தமிழர் தாயகம் பகுதியும் அதையொட்டிய கடற்பிராந்தியம் தமிழர் இறைமைக்கு உட்பட்டவை. இதனை உறுதி செய்திடத் தமிழர் தேசமும் தமிழர் அரசியல் தலைமைகளும் தமது அரசியல் இறையாண்மையினை செலுத்த வேண்டும்” என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related

Tags: சீனாநாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாநிலங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை – ஸ்டாலின்

Next Post

தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து தைவானுடன் பேச்சுவார்த்தை!

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!
இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!
உலகம்

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2026-01-26
கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச
இலங்கை

கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

2026-01-26
மீண்டும் pickmeக்கு எதிராக நுவரெலியாவில் போராட்டம்
இலங்கை

மீண்டும் pickmeக்கு எதிராக நுவரெலியாவில் போராட்டம்

2026-01-26
எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவு!
இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவு!

2026-01-26
Next Post
தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து தைவானுடன் பேச்சுவார்த்தை!

தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து தைவானுடன் பேச்சுவார்த்தை!

கைதிகள் அச்சுறுத்தல் – லொஹானின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு!

லொஹான் ரத்வத்தவை ஒருவாரத்தினுள் கைதுசெய்யாவிடில் சட்ட நடவடிக்கை

முறையாக முகக்கவசம் அணியாதோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

முறையாக முகக்கவசம் அணியாதோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

0
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

0
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

0
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

0
கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

0
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2026-01-26

Recent News

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.