இலங்கையால் நிராகரிக்கப்பட்ட சீன உரக் கப்பலுக்கு நட்டஈடு வழங்கப்படாவிட்டால் அது நாட்டுக்கு பாரிய இழப்பாகும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உர விவகாரத்தில் 6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவைப் பகைத்துக்கொள்ள முடியாது என கூறினார்.
இது இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்பாடு என்பதால் ஒரு தலைப்பட்சமான முடிவுகளை எடுக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
எனவேதான் குறித்த சீன நிறுவனத்திற்கான இழப்பீட்டை வழங்க அமைச்சரவை தீர்மானித்தது என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவுடன் முரண்படாமல் அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்தே அவதானம் செலுத்த வேண்டும் என கூறினார்.
இதன் மூலம் கிடைக்கும் இலாப நஷ்டத்தை ஏற்க வேண்டும் என குறிப்பிட்ட அமைச்சர், ஏனைய நாடுகளை பகைத்துக் கொண்டு பயணம் செய்ய முடியாது என குறிப்பிட்டார்.