இலங்கையில் எதிர்வரும் மூன்று வாரங்களில் வேகமாகப் பரவும் கொரோனா திரிபாக ஒமிக்ரோன் காணப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள 7 ஒமிக்ரோன் நோயாளர்கள் தொடர்பான ஆய்வின் மூலம் இது தெளிவாகிறது என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒமிக்ரோன் நோயாளர்கள் அதிகமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நாடு மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலைமைக்கு உள்ளாவதைத் தடுப்பதற்குப் பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.