நிதி நெருக்கடியில் சிக்கிய ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்த மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசின் உயரதிகாரிகள் தெரிவிக்கையில், ஏர் இந்தியா நிறுவனத்தை அதிகபட்ச தொகைக்கு ஏலம் கேட்ட டாடா சன்ஸ் நிறுவனத்தின் விண்ணப்பத்தை மத்திய அரசு கடந்த ஒக்டோபரில் ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து அந்த நிறுவனத்துக்கு ஏர் இந்தியா ம்றறம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவீத பங்குகளையும், அதனுடன் சேர்த்து சரக்கு போக்குவரத்தை கையாளும் ஏஐஎஸ்ஏடிஎஸ் நிறுவனத்தின் 50 வீத பங்குகளையும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது 20 ஆண்டுகளில் முதல் தனியார் மயமாக்கும் நடவடிக்கையாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.