வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, திருமணம் மனிதனின் அடிப்படை உரிமை எனவும் இந்த அறிவிப்பு ஒருவரது அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மீறும் செயல் என தெரிவித்துள்ளார்.
பதிவாளர் நாயகம் இவ்வாறான சுற்றறிக்கையை வெளியிடும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வாழ்க்கைத் துணை விசாவில் இங்கு வசிப்பதற்கான அறிக்கைகள் அதிகரித்து வருவதால் வெளிநாட்டுப் பிரஜையை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.