பண்டிகைக் காலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பெரும்பாலான மக்கள் கடைப்பிடிப்பதாக பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவி சந்திப்பில், பண்டிகைக் காலங்களில் மக்களின் நடத்தை திருப்திகரமாக உள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்றினால் பண்டிகை காலத்தை கொண்டாட முடியும், இல்லை என்றால், அடுத்த சில வாரங்களில் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறியிருந்தார்.
மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்டதைப் போன்று, எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்குப் பின்னர் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.