அவுஸ்ரேலியாவில் புதிய மாறுபாடான ஒமிக்ரோனுக்கு முதல் உயிரிழப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான நியூ சவுத் வேல்ஸில், 80 வயது முதியவர் ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த மாகாணத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி புதிதாக 6,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விக்டோரியா மாகாணத்தில் 1,999 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்த சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து தனிமையில் இருக்க வேண்டும் என்ற விதிமுறையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக சுகாதார அமைச்சர் பிராட் ஹசார்ட் தெரிவித்துள்ளார்.