பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம், பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் சட்ட பிரிவின் பணிப்பாளர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நேற்று(புதன்கிழமை) அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போதே குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கைதிகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஆணைக்குழுவிடம் உள்ள ஒழுங்குகளுக்கு அமைவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.