அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடாதமைக்கு சீனாவின் அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளே காரணம் என ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்தனையும் மீறி இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் சீனாவினால் அடுத்த கட்டத்தில் கொடுப்பதாக வாக்குறுதியளித்துள்ள சகல நிதியும் நிறுத்தப்படும் என கூறினார்.
அத்தோடு அவர்கள் மூலமாக கிடைக்கப்பெற்றுள்ள கடன்களையும் மீள செலுத்த கடுமையான அழுத்தம் கொடுப்பார்கள் என்றும் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் மூலமாக கடன்களை பெற்றுக்கொண்டால் எவருக்குமே தரகுப்பணம் கிடைக்காது என்பதனாலேயே அவர்கள் இதுவரை சர்வதேச நாணய நிதியத்தை நாடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை பாரிய நிதி நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுள்ள இந்த நிலையிலும் அரசாங்கம் மக்களின் பணத்தை கொள்ளையடிக்க மட்டுமே முயற்சிக்கின்றது என விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.