புத்தாண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தோற்கடிக்கப்படும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானோம் கெப்ரேசேயஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
தனது புத்தாண்டு அறிக்கையில், குறுகிய தேசியவாதம் மற்றும் தடுப்பூசி பதுக்கலுக்கு எதிராக தனது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினார்.
சீனாவில் அறியப்படாத நிமோனியா பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்புக்கு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
உலகளாவிய கொவிட் தொற்றுகள் இப்போது 287 மில்லியனாக உள்ளன. அதே நேரத்தில் கிட்டத்தட்ட 5.5 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.