கடும் சிரமத்திற்கு மத்தியில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த ஆண்டு உணவிற்கான பணவீக்கம் இரட்டிப்பாக அதிகரித்துள்ள நிலையில் 5000 ரூபாய் நிவாரணம் போதாது என் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிக்கப்படும்போது சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டியதே பொருளாதார கோட்பாடு என அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் ஒரு தரப்பினருக்கு மட்டுமே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இது மற்றைய மக்களுக்கு செய்யும் அநீதி என்றும் ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டினார்.