மக்களுக்காக செயலாற்ற முடியாத அரசியல்வாதிகள் வீடுகளில் இருக்க வேண்டும் என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷதெரிவித்துள்ளார்.
நாட்டினையும் அதன் மக்களையும் நேசிப்பவர்களுக்கு அமைச்சு பதவி என்பது ஐந்து சதத்திற்கும் பிரயோசனம் அற்றது என்றும் அவர் கூறினார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு விற்பதற்கு எடுத்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதாகவும் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அரசாங்கமா எதிர்கட்சியா என்பது முக்கியமல்ல மக்களுக்காக பேசுவதே மக்கள் பிரதிநிதிகளின் முதற்கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே நாட்டு மக்களுக்காக குரல்கொடுக்க முடியாத அனைத்து அரசியல்வாதிகளும் வீடுகளில் இருக்க வேண்டும் என்றும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.