கொரோனா தொற்று பரவல் காரணமாக, சீனாவில் இரண்டாவது நகரத்திலும் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
1.1 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட யூஸோ நகரத்தில், மூன்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த நகரை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய உணவு விற்பனையகம் தவிர்ந்த, ஏனைய அனைத்து விற்பனையகங்களும் ஒரே இரவில் மூடப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக, 13 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சியான் நகரில் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் முடக்க கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டது.
பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள புத்தாண்டு மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைக் கருத்திற்கொண்டு, இந்த முடக்கநிலை அமுலாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.