ஒமிக்ரோன் மற்றும் அதன் மீதான சவால்களை சமாளிக்க தமிழக அரசு முழுமையாக தயார் நிலையில் உள்ளதென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) நடைப்பெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மேலும் கூறியுள்ளதாவது, “ஒமிக்ரோனை தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் தடுப்பூசி போடும் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 86.95 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரண நிதிக்கு 543 கோடி ரூபாய் வந்த நிலையில் 541.64 கோடி ரூபாய் நிதி செலவழிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களையும் மறுசீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியையும் மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.