இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 27 மாநிலங்களில் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 876 பேருக்கும், அதற்கு அடுத்தப்படியாக டெல்லியில் 465 பேருக்கும் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கமும் தற்போது அதிகரித்து வருகின்ற நிலையில், ஒமிக்ரோன் பாதிப்பு மிகப்பெரிய சவாலாக அமையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.