சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இன்று (சனிக்கிழமை) இலங்கைக்கு வருகை தரும் அவர், நாளை வரை நாட்டில் தங்கியிருப்பார் என சீன தூதரகம் அறிவித்துள்ளது.
சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு விழாவைத் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது அவர் சில முக்கியஸ்தர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.