லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக ரேனுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கெரவலப்பிட்டிய லிட்ரோ எரிவாயு முனையத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.