நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதால், இவ்வாறு மின் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, களனிதிஸ்ஸ தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று மின்வெட்டு ஏற்படவில்லையென்றாலும் எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காது என உறுதியாகக் கூற முடியாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனல்மின் நிலையம் திடீரென சரிந்ததன் காரணமாக தேசிய மின் உற்பத்திக்கு 163 மெகாவாட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறான நிலையில், நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி கூறியுள்ளார்.