கஜகஸ்தானில் எரிபொருள் விலைக்கு எதிரான அமைதியான போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்ய தலைமையிலான இராணுவத்தின் உதவியை அரசாங்கம் நாடிய நிலையில் 225 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவசரகால நிலை பிரகடனத்தில் உள்ள நிலையில் இவ்வாறு உயிரிழந்தவர்களின் 19 பேர் சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் வன்முறை சம்பவத்தினால் காயமடைந்துள்ள 2,600 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 67 பேர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.