எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியா வழங்கியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு எழுதிய கடிதத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் அந்நிய செலாவணி நெருக்கடியை சரிசெய்ய நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் பிரகாரம் 900 மில்லியன் டொலர் நிதியை இந்தியா அண்மையில் வழங்கியிருந்தது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் இருதரப்பு பொருளாதார வர்த்தக தொடர்புகளின் பாரிய பங்களிப்பாக இந்த சலுகைகள் வழங்கப்பட்டது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்கும் என ஜெய்சங்கர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.