நாட்டில் தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை, 49 இலட்சத்தைக் கடந்துள்ளது.
நேற்று மாத்திரம் நாட்டில் 27 ஆயிரத்து 919 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 இலட்சத்து 16 ஆயிரத்து 430 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் 12 ஆயிரத்து 571 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 221 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல நேற்று 792 பேருக்கு சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் ஆயிரத்து 795 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.