ஹைதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில நிலநடுக்கங்களில் கட்டங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
தலைநகர் போர்ட் அயு பிரின்சின் மேற்கு பகுதி மற்றும் நிப்பஸ் மாவட்டத்தில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிக்டர் அளவுகோளில் அதிகபட்சமாக 5 புள்ளி 3 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால், பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதன்காரணமாக ஏறத்தாழ 200 வீடுகள் இடிந்து தரைமட்டமானதாகவும், 600 கட்டடங்கள் சேதமானதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 50 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.