ஜேர்மனியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீடித்து பிரதமர் அறிவித்துள்ளார்.
பொதுநிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டதற்கான சான்று அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ்களுடன் வருபவர்களுக்கு மாத்திரமே பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதி என உத்தரவிடப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்தின் மத்தியில் ஒமிக்ரோன் தொற்று பரவல் உச்சம் தொடும் என்ற சிறப்பு சுகாதார குழுவின் எச்சரிக்கையை அடுத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
வைரஸ் பரவல் குறையும் சூழலில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுமெனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.