கொரோனா முடக்கலை கையாள்வதில் சீனாவின் கடுமையான அணுகுமுறை காரணமாக அந்நாட்டின் மில்லியன் கணக்கான மக்கள் அன்றாட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போரடி வருகின்றார்கள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, எச்.கே. போஸ்ட் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா தொற்றை கையாள்வதில் இரண்டு ஆண்டுகளாக, போராடிவரும் சீன அரசாங்கம் தனது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கத் தவறி வருவதாகவும், மனித உரிமைகளை பொருட்படுத்தாது எல்லைகளில் கடுமையான விதிகளை அமுலாக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் திகதி முதல் கடுமையான முடக்கலுக்கு உள்ளாகியிருக்கும் சியான் நகரத்தின் நிலைமைகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதாக எச்.கே. போஸ்ட் தெரிவிக்கின்றது.
சியான் நகரத்தில் ஏறக்குறைய 13 மில்லியன் மக்கள் வசிக்கும் நிலையில் அந்நகரத்தில் பயங்கரமான உணவுப் பற்றாக்குறை, விநியோகம், நிர்வாகச் சிக்கல்கள் காணப்படுவதோடு கடுமையான நோயாளிகள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
ஒருநாளைக்கு ஒரு வேளை மட்டுமே கஞ்சியை உணவாக எடுத்துக்கொள்வதாகவும் அதிலும் பலர் பட்டினியின் விழும்பில் இருப்பதாகவும் முறைப்பாடுகளைச் செய்துள்ளதாகவும் தகவல்கள் பதிவாகியுள்ளன.
அந்த நகரத்தின் அதிகாரிகள் ‘உள்ளுர் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் சிக்கல்கள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும், ‘சியானில் உள்ள அன்றாடத் தேவைகளுக்கான மொத்த விநியோகம் போதுமானது’ என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் உள்ளனர்.
குறித்த அறிக்கையின் பிரகாரம், மக்கள் தமக்கான உணவு தீர்ந்து போகும் போது தங்கள் வீட்டு வளாகங்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.
அத்துடன் தாம் எப்படி வாழ்கிறோம்? என்ன சாப்பிடுகிறோம்? எத்தனை நாட்களுக்கு முன்பு, பொருட்களை வாங்க கடைக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றோம் என்ற விடயங்கள் அவதானிக்கப்பட வேண்டம் என்று கூறியுள்ளனர்.
அத்துடன், இணையவழியிலான கொள்வனவும், விநியோகமும் நடைபெறுவதும் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என சமூக ஊடகத்தில் ஒருவர் எழுதியுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோயின் மையமாகக் கருதப்படும் சீனாவின் மற்றொரு நகரமான வுஹானும் இதேபோன்ற முடக்கல் நிலையிலேயே வைக்கப்பட்டது.
ஏறக்குறைய 11 மில்லியன் மக்கள் பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகளுக்கு முகங்கொடுத்தனர். குறிப்பாக அவர்கள் தங்கள் வீடுகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டனர்.
அதேபோன்று சீனாவில் உள்ள குறித்த நகரமானது 13 மில்லியன் நபர்களை முடக்கியுள்ளது. இது வுஹானுக்குப் பிறகு சீனாவில் நடைபெற்ற மிகப்பெரிய முடக்கலாகும்.
வுஹானைப் போலவே, சியான் நகரமும் இப்போது சீனாவின் ‘பூச்சிய-கொரோனா கொள்கை இலக்கை அடைய செலவுகள்’ என்ற வகையில் விதிமுறைகள் அமுலாக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஹெனானின் குஷி மாகாணத்தில், ஒரேயொரு அறிகுறி மற்றும் ஒரு அறிகுறியற்ற தொற்றாளர்கள் இருவரே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்னும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் குடியிருப்பாளர்கள் நகரத்தை விட்டு வெளியேற முடியாதுள்ளனர். யூசோ நகரத்தில் ஒரு மில்லியன் குடியிருப்பாளர்கள் பூட்டப்பட்டிருக்கும் சூச்சாங்கிலும் இதேபோன்ற தடைகள் போடப்பட்டுள்ளன.
58 கொரோனா வழக்குகள் வெளிவந்த பின்னர் அதிகாரிகள் அன்யாங் நகரத்தையும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வைத்துள்ளனர், அதேநேரத்தில் தியான்ஜினில் 14 மில்லியன் மக்களின் நடமாட்டம் நகரத்திலிருந்து 21 கொரோனா வழக்குகள் பதிவாகிய பின்னர் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டது.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 8 அன்று, சியான் குடியிருப்பாளர்களுக்கு மற்றொரு விரும்பத்தகாத விடயத்தினை எதிர்கொண்டனர்.
அங்கு செயற்பட்டு வந்த ஹேமா ஃப்ரெஷ் ஃபுட் டெலிவரி ஆப்ஸ் என்பது ‘அரசாங்கத்தின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு கோரிக்கைகளுக்கு இணங்க’ இணையவழியில் கொள்முதல் செய்வதை நிறுத்தியது.
அலிபாபா குழுமத்திற்குச் சொந்தமான ஹேமா சியான்ஷெங், சியானின் பல மாவட்டங்களில் உணவு விநியோகம் செய்யும் விற்பனை நிலையமாகும். இதற்கு பல கிளைகளும் உள்ளன. இவை சுகாதார விதிகளை மீறுவதாக அதிகாரிகள் கூறினர்.
இதனால் வலை எழுத்தாளர்கள் கடுமையாக சினமடைந்து எமக்கு உணவு வழங்கிய ஒரேயொரு நிறுவனமும் மூடப்படுகின்றது. இது வெட்கக் கேடானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.