நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுவதாக பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாரஹென்பிட்டி – கிரிமண்டல மாவத்தையில் விமானப் படையினருக்கான புதிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் இன்று(வியாழக்கிழமை) பாதுகாப்பு செயலாளர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.