இத்தாலியின் ஜனாபதிபதியாக தற்போதைய ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லா, இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரதிநிதிகள் சபையில் 1,000க்கும் மேற்பட்ட சட்டமியற்றுபவர்கள் மற்றும் பிராந்திய பிரதிநிதிகள் மத்தியில் எட்டாவது சுற்று வாக்கெடுப்பில், மேட்டரெல்லா 1009 வாக்குகளில் 759 வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த வாரம் முறைப்படி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதியான மேட்டரெல்லாவின் ஏழு ஆண்டு பதவிக்காலம், பெப்ரவரி 3ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
ஆனால், 80 வயதான மேட்டரெல்லா, நீண்ட காலமாக பதவியில் நீடிப்பதை நிராகரித்திருந்தார். ஆனால் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால், முந்தைய நாள் ஜனாதிபதி மாளிகையில் அவரைச் சந்தித்த நாடாளுமன்றத் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
1946இல் இத்தாலி குடியரசாக மாறியதில் இருந்து ஜியோர்ஜியோ நபோலிடானோ இரண்டாவது முறையாக பணியாற்றினார். ஆனால் அவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2015இல் இராஜினாமா செய்தார்.
அரசியல் நெருக்கடிகளின் போது அரச தலைவர் கணிசமான அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கலைப்பது முதல் புதிய பிரதமர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் பலவீனமான கூட்டணிகளுக்கான கட்டளைகளை மறுப்பது வரையிலான அதிகாரங்கள் ஜனாதிபதி பதவிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.