கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு கூடுதலாக, தற்போது நாட்டில் கண்டறியப்படாத வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.
எனவே, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
டெங்கு காய்ச்சல் பரவுவது நாட்டில் ஒரு தொற்றுநோய்க்கான அறிகுறிகளைக் காட்டுகிறதென்றும் மேல் மாகாணம் உட்பட நகர்ப்புறங்களில் பெரும்பாலான வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.
கட்டுமானப் பணியிடங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகளவில் கண்டறியப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.