கறுப்புச் சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் வடகொரியாவிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தது என வெளியான தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளது.
“நாங்கள் கள்ளச்சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை பெற்றோம் – பசில்“ என்ற தலைப்பில் செய்தி இணையத்தளமொன்றில் வெளியான தகவல் குறித்து தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதியமைச்சருடன் இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என்றும் இதன்போது நிதியமைச்சர் தான் தெரிவித்ததாக வெளியான கருத்துக்களை முற்றாக நிராகரித்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.