உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சத்தின் மத்தியில், நேட்டோ நட்பு நாடுகளுக்கு ஆதரவாக ஐரோப்பாவிற்கு கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்க முடிவை ரஷ்யா கண்டித்துள்ளது.
‘மின்ஸ்க் ஒப்பந்தத்தை தண்டனையின்றி நாசவேலை செய்வதைத் தொடரும் உக்ரேனிய அதிகாரிகளுக்கு இது மகிழ்ச்சியளிக்கும்’ என ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோ தெரிவித்துள்ளார்.
‘மின்ஸ்க் ஒப்பந்தத்தை தண்டனையின்றி நாசவேலை செய்வதைத் தொடரும் உக்ரேனிய அதிகாரிகளுக்கு இது மகிழ்ச்சியளிக்கும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
இது பதற்றத்தை அதிகப்படுத்துவதோடு அரசியல் தீர்வுக்கான வாய்ப்பையும் குறைப்பதாக ரஷ்யா தரப்பில் கூறப்படுகின்றது.
நிலைநிறுத்தப்படும் அமெரிக்கத் துருப்புக்கள் உக்ரைனில் சண்டையிடாது பதிலுக்கு வொஷிங்டனின் நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று பென்டகன் முன்னதாக கூறியது.