ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 7 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் நேற்று இரவு பொலிஸில் சரணடைந்தமையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் ஜீப் ரக வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.