மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த அமைச்சர், யார் எதனை கூறியபோதிலும் தற்போதைய சூழ்நிலையில் மின்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டதென குறிப்பிடடுள்ளார்.
தான் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கும் மின்சார சபைக்கும் தெரிவிப்பது என்னவெனில் மின்கட்டணத்தை அதிகரிப்பதில்லை என்பதுடன், மீளுருவாக்கம் மின்சக்தியின் மூலம் 1000 மெகாவோல்ட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடிந்தால் மின்கட்டணத்தை ஓரளவிற்கு குறைத்துக்கொள்ள முடியும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.