கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரை குறித்த பரீட்சை இடம்பெறவுள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
இம்முறை 2 ஆயிரத்து 437 பரீட்சை மையங்களில் உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதுடன், 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அவர்களில், 2 இலட்சத்து 79 ஆயிரத்து 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 66 ஆயிரத்து 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சை எழுதவுள்ளனர்.