தமிழக சிறப்பு பேரவையில் நீட் விலக்கு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுவரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நீட் விலக்கு சட்டமூலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கூடியது.
இந்த கூட்டத்தில், நீட் விலக்கு சட்டமூலத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, நீட் விலக்கு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்காமல் பேரவையிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.