கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணத்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று (புதன்கிழமை) மாலை 4 மணி முதல் இவ்வாறு 14 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஏக்கல, கொட்டுகொட, உதம்மிட்ட, ரஜ மாவத்தையின் துடெல்ல முதல் 20 மைல் கல் வரையான பகுதி, வஹட்டியகம, தெலத்துர, கட்டுநாயக்க, சீதுவ, உடுகம்பொல மற்றும் மினுவாங்கொடை பகுதி, கட்டுநாயக்க விமானப்படை தளம், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் கட்டான தெற்கு ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஜா-எல வீதியின் நீர்க்குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் காரணமாகவே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.