ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக முதலாவது கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கான முன்னெடுப்புகள், கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள், மின்சார நெருக்கடிக்கான தீர்வு உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளன.