பீஜிங்கில் இடம்பெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நாடுகள் இதுவரை பெற்றுள்ள பதக்கங்களின் அடிப்படையில், நோர்வே முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
நோர்வே இதுவரையில், 4 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் அடங்கலாக 9 பதக்கங்களை வென்று முதலாம் இடத்தை தக்க வைத்துள்ளது.
சுவீடன் 4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் நெதர்லாந்து 3 தங்கம் 3 வெள்ளி, 1 வெண்கலம் அடங்கலாக 7 பதக்கங்களுடன் 4 ஆம் இடத்திலும் உள்ளன.
சீனா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தலா 3 தங்கம், 2 வெள்ளி அடங்கலாக 5 பதக்கங்களுடன் முறையே 4ஆம் 5 ஆம் உங்களில் உள்ளன.
இதேவேளை 6 ஆம் இடத்தில் உள்ள இத்தாலி 2 தங்கம், 4 வெள்ளி 1 வெண்கலம் அடங்கலாக 7 பதக்கங்களை பெற்றுள்ளது.