சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 4ஆவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது.
சுகாதார அமைச்சுடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் கடந்த திங்கட்கிழமை காலை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதன்காரணமாக பல வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிப்படைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.