இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிக்களுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டி இடம்பெறும் மைதானத்திற்கு அருகில் புலம்பெயர் தமிழர்கள் சிலரினால் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சிட்னி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நுழைவாயிலுக்கு முன்பாக சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரிக்கெட் போட்டிகளை விளையாடி மகிழ்ந்தாலும், கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளை மறந்துவிட முடியாது என அவர்கள் குறிப்பிட்டதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை அணி அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகின்ற சந்தர்ப்பங்களின் போது இவ்வாறான எதிர்ப்பு போராட்டங்கள் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைககள் காரணமாக, இலங்கை வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க சில நாடுகள் நடவடிக்கை எடுத்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.