நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே முகாமிட்டுள்ள எதிர்ப்பாளர்களை வெளியேற்றும் முயற்சியில், நியூஸிலாந்தில் உள்ள அதிகாரிகள் அமெரிக்க பாடகர் பேரி மணிலோவின் மிகப்பெரிய வெற்றி பாடல்களை வாசித்து வருகின்றனர்.
அமெரிக்க பாடகரின் பாடல்கள் ஸ்பானிய நடன ட்யூன் மக்கரேனாவுடன் 15 நிமிட லூப்பில் இசைக்கப்படுகின்றன.
கொவிட்-19 தடுப்பூசி ஆணைகளில் கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ட்விஸ்டட் சிஸ்டர்’ஸ் வீ ஆர் நாட் கோனா டேக் இட் போன்ற பாடல்களை இசைத்து பதிலளித்தனர்.
செவ்வாய்கிழமையன்று வாகனத் தொடரணி ஒன்று நாடாளுமன்றத்திற்குச் சென்றபோது போராட்டங்கள் ஆரம்பமாகின.
கனடாவில் தடுப்பூசி ஆணைகளுக்கு எதிரான பெரிய பேரணிகளால் ஈர்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தலைநகர் வெலிங்டனுக்கு வந்து, கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பேரணி நடத்தினர்.
அவர்கள் ‘சுதந்திரத்திற்கான கான்வாய்’ என்ற பெயரை ஏற்றுக்கொண்டனர் மற்றும் நகரத்தில் வீதிகளை அடைத்தனர்.
புதன் கிழமைக்குள் அவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்ட போதும், வார இறுதியில் அவை மீண்டும் அதிகரித்தன.
வியாழக்கிழமை பொலிஸார் 122 பேரை கைது செய்தனர் மற்றும் அத்துமீறி நுழைந்ததாக அல்லது தடுத்ததாக பலர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
பேரி மணிலோவின் சிறந்த வெற்றிகளான மாண்டி மற்றும் குட் இட் பி மேஜிக், அத்துடன் 1990களில் ஹிட் மக்கரேனா மற்றும் கொவிட் தடுப்பூசி செய்திகள் ஆகியவை அடங்கும்.