சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதா அல்லது கைவிடுவதா என்ற தீர்மானத்தை இன்று ( திங்கட்கிழமை ) மேற்கொள்ளப் போவதாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுகாதார தொழிற்சங்கங்கள் தற்போது முன்னெடுத்து வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் தொடர்கிறது.
அண்மையில் சுகாதார சேவையையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது.
இதனை மீறும் வகையிலேயே 15 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கம் தாம் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.